Thursday 2nd of May 2024 01:33:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் 237 கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் 237 கொரோனா தொற்றாளர்கள்!


இலங்கையில் 237 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த செப்-12 தொடக்கம் செப்-15 வரையான நான்கு நாட்களில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் செப்-16 புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3271 ஆக உள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சைக் கூடங்களில் சிக்கை பெற்று வருபவர்கள் நேற்று மேலும் 5 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது எண்ணிக்கை 3021 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சைக் கூடங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 237 ஆக உள்ளது.

இதேவேளை பஹ்ரைனில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த தினத்தில் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை இலங்கையில் கொரோன தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE